IPL Match63 - மும்பை அணிக்கு எதிராக 177 ஓட்டங்களை எடுத்த லக்னோ

#IPL #T20 #Lucknow #Mumbai
Prasu
2 years ago
IPL Match63 - மும்பை அணிக்கு எதிராக 177 ஓட்டங்களை எடுத்த லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் காயம் காரணமாக வெளியேறினார். மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். 

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!