சுவிஸர்லாந்தில் எழுச்சியுடன் அனுஷ்ட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் பேரணியும்!
சுவிஸர்லாந்தின் பேர்ண் மாநகரத்தில் பாராளுமன்றத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு பேரணி நடைபெற்றுள்ளது.
பேர்ண் மாநிலத்திலுள்ள நாடாளுமன்றத்திற்கு முன்னால் அமைந்துள்ள திடலில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், முள்ளிவாய்க்கால் சிலைக்கான நினைவுச் சுடர் ஏற்றல் போன்ற நிகழ்வுகளுடன் மாலை 3 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் மாலை 05.00 மணிவரை இடம்பெறுகின்றன.
சுவிஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் இளையேர் அமைப்பு மற்றும் அரசியல் துறையை சேர்ந்தோரால் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளையதினம்(18) சுவிஸர்லாந்தில் பொது விடுமுறை நாள் என்பதால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றன.