ஜப்பான் ஒசாகா திரைப்பட விழாவில் விஜய், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் ஆகியோருக்கு விருது

#Cinema #Actor #Actress #TamilCinema #Award
Mani
3 years ago
ஜப்பான் ஒசாகா திரைப்பட விழாவில் விஜய், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் ஆகியோருக்கு விருது

ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் தமிழ்த் திரைப்படங்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறந்த தமிழ் நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் சிறந்த நடிகருக்கான விருதையும், தலைவி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

சிறந்த வில்லன் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர், நடிகை விருது ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் பெறுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4