கனகதுர்க்கை அம்மனுடைய திருவருளில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்த இலங்கையிலிருந்து முத்தமிழ் குருமணி சர்வேஸ்வர குருக்கள் அழைத்துவரப்பட்டுள்ளார்

#SriLanka #Australia #Temple #spiritual #Lanka4 #London
Kanimoli
1 year ago
கனகதுர்க்கை அம்மனுடைய திருவருளில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்த இலங்கையிலிருந்து முத்தமிழ் குருமணி சர்வேஸ்வர குருக்கள் அழைத்துவரப்பட்டுள்ளார்

எல்லாம் வல்ல கனகதுர்க்கை அம்மனுடைய திருவருளினாலே அம்பிகைக்கு நடைபெற இருக்கின்ற மூன்றாவது மகா கும்பாபிஷேகத்தை நிகழ்த்துவதற்காக இலங்கையிலிருந்து முத்தமிழ் குருமணி சர்வேஸ்வர குருக்கள் அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அவர்கள் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவித்து அன்னை துர்க்கை அம்பலனுடைய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி இருந்தார்.

 இந்தச் சிறப்புகளோடு முத்தமிழ் குருமணி சர்வேஸ்வர குருக்கள் அவர்கள் இன்றைய தினம் பிரித்தானியா லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு வருகை தந்து ஈலின் கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபையினர் நிர்வாக சபையினர் தொண்டர்கள் குருமார்கள் எல்லோரும் அவரை அன்போடு வரவேற்று கௌரவித்து அவருடைய ஆசி பெற்று வருக வருக என வரவேற்று அழைத்து இருக்கின்றார்கள்.

குருக்கள் அவர்களோடு இலங்கையிலே வல்வெட்டித் துறை சிவன் கோவில் பிரதம குரு மனோகர குருக்கள் அவர்களும் மற்றும்தெல்லிப்பளை அம்மன் ஆலய குகன் அவர்களும் இலங்கையிலே புகழ் பூத்த சர்வ சாதகமாக விளங்குகின்ற சனாதன சர்மா ஐயா அவர்களும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஈஸ்வரன் குருக்கள் அவர்களும் வருகை தந்திருக்கின்றார்கள் அன்போடு அவர்களை வரவேற்று ஈலிங் கனவுக்கு ஆலயம் சார்பாக வரவேற்று அனைவரையும் ஆலயத்துக்கு தற்பொழுது அழைத்துக்கொண்டு செல்கிறோம். நன்றி

images/content-image/1684824957.jpgimages/content-image/1684825022.jpgimages/content-image/1684825029.jpg

images/content-image/1684825054.jpg