50 கோடி பேசியும் முடியாது என மறுத்த விக்ரம்… ரஜினி விருப்பப்படும் முடியாது என மறுப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய கோலிவுட் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிறார்.
70 வயதை கடந்தும் முன்னணி ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் ரஜினிக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகிலுமே ரசிகர்கள் அதிகம் உண்டு.
இன்று வரை இவர் அளவுக்கு மாஸ் மற்றும் கிளாஸ் காட்டும் நடிகர்கள் இந்திய சினிமாவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எத்தனையோ முன்னணி ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தாலும் ரஜினியுடன் ஒரு படமாவது பண்ணி விட வேண்டும் என்பதுதான் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் கனவுகளாக இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை ரஜினி பெரிய, பெரிய இயக்குனர்களுக்கு மட்டுமே படம் பண்ணிக் கொண்டிருந்தார்.
ஆனால் தற்போது தன்னுடைய ரூட்டை மாட்டிக் கொண்டு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சமீப காலமாக நிறைய இளம் இயக்குனர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவதோடு, அவர்களிடம் கதையும் கேட்கிறார் ரஜினி.
சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போதெல்லாம் தனக்கு பிடித்த கதை மற்றும் இயக்குனர்களுடன் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்படி ரஜினி விரும்பி பணியாற்றிய இயக்குனர் தான் பா. ரஞ்சித். இவருடன் கபாலி மற்றும் காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணைந்து பணியாற்றினார்.
இதில் கபாலி திரைப்படத்திற்காக ரஜினிகாந்த் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் தானாகவே தேடிச்சென்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அந்த நிறுவனமோ உங்களுடைய இயக்குனர்களுக்கும், உங்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்கும் அளவிற்கு நாங்கள் இல்லை என்று சொல்லி இந்த வாய்ப்பை நிராகரித்து இருக்கின்றனர்.
தற்போது தளபதி விஜய்யின் 68 ஆவது படத்தை இயக்கப் போகும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் அந்த தயாரிப்பு நிறுவனம்.
இவர்கள் அந்த படத்தை நிராகரித்ததற்கு பிறகுதான் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ் தன்னுடைய ஒண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரித்தார்.
கபாலி வெற்றி பெற்ற அளவிற்கு காலா வெற்றி பெறவில்லை. இதனால் தனுஷுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்தது.
நல்ல வேலையாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை இயக்காமல் தப்பித்துக் கொண்டது.
ஆனால் ரஜினி விரித்த வலையில் சிக்கி தனுஷ் தான் மோசம் போய்விட்டார். அதன் பின்னர் சில வருடங்களுக்கு அவர் படம் தயாரிக்கவும் இல்லை.