பல நன்மைகள் தரும் பண்ணைக்கீரை!
இவற்றுள் நறும் பண்ணை தவிர மற்றவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை. குணத்திலும் வினைபுரிதலிலும் ஒன்றுபட்டே இருக்கும்.பண்ணை கீரையானது மயில் கீரை, மகிழிக்கீரை, மௌலிக் கீரை, மசிலிக் கீரை எனப் பல பெயர்களில் வழங்கி வருகிறது.
“பண்ணையிளம் கீரையது பற்று மலமிளக்கும்எண்ணுங் குடலுக்கிதங் கொடுக்கும் – பெண்ணேகேள்!சீதங் கரப்பான் சிரங்குபுண் மாற்றிவிடும்கோதங் கிலையதனைக் கொள்”பண்ணை கீரையானது வயிறு மந்தம், இருமல், சீதபேதி, மூத்திரத்தாரை நோய், பெரும்பாடு, சொறி, சிரங்கு, கரப்பான், கழலை, புண் போன்றவைகளை நீக்கும். மலத்தை இளக்கும், குடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.வாரம் ஒரு முறை பண்ணைக் கீரையை சுத்தம் செய்து, அதனுடன் பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ வேகவைத்து கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு நன்மை தரும்.பண்ணைக் கீரையை சுத்தம் செய்து வேகவைத்து வெங்காயம், மிளகாய், புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.குடல் புண் மற்றும் சரும வியாதிகளை குணப்படுத்த இக்கீரையை பருப்புடன் சேர்த்து வேகவைத்து, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கடைந்து சாதத்தில் நெய் விட்டு கலந்து சாப்பிட ஜீரண குடல் மற்றும் மலக்குடல் வலிமை அடையும். மேலும், சரும நோய்களான சிரங்கு, கரப்பான், புண் போன்ற நோய்கள் போகும்.பெரும்பாடு நீங்கபண்ணை கீரையின் பூக்களை பறித்து சுத்தம் செய்து, அவற்றை 250 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கசாயம் ஆக்கி தினமும் காலையில் குடிக்க மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும்.கழிச்சல், சீதபேதி குணமாகஇக்கீரையின் பூக்களை சுத்தம் செய்து வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடிக்கவும்.