பிரபல அமெரிக்க பாப் பாடகி சுவிஸ் நாட்டில் மரணம்

#Death #America #swissnews
Krishnamoorthy Prasanna
5 days ago
பிரபல அமெரிக்க பாப் பாடகி சுவிஸ் நாட்டில் மரணம்

அமெரிக்காவில் கறுப்பினத்திலே பிறந்து மிக பெரிய பாடகியாக உலகமெல்லாம் பிரசித்திபெற்ற பாடகி டினா டர்னர் இன்று தனது 83வது வயதில் காலமானார்.

பாப் பாடகியாக கலக்கிய இவர் 1990களில் இருந்து சுவிட்சர்லாந்தில் குஷ்னாத் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு சுவிட்சர்லாந்தில் பிரஜா உரிமையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பல காலங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் இன்று இறைவனடி சேர்ந்தார்.

மேலும் இவர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு இந்து மத பாடலை எந்தவிதமான கூலியும் இல்லாமல் தனது நண்பிகளுக்காக பாடிக்கொடுத்துள்ளார்.

இப்பாடல் உலகமெங்கும் ஒலித்து இந்து மத மக்களிடையே புகழ் பெற்றிருக்கிறது.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய Lanka4 ஊடகம் பிராத்திக்கின்றது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு