11 உறுப்புக்கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவு தற்காலிகமாக நிறுத்தம் என்ற அறிவிப்பு வாபஸ்
#Student
#Tamil Student
#students
Mani
1 year ago

11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழிப்பாடப்பிரிவுகள் நீக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப்பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அவர், வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என விளக்கமளித்தார்.
தமிழ் வழி பாடப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்பது தங்களது நோக்கம் அல்ல என்றும், தமிழ் வழியில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



