அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தியை சந்தித்து அவசர சட்ட விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார்.
#India
#Rahul_Gandhi
Mani
1 year ago

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக, அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க துணைநிலை ஆளுநரை அனுமதிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவசரச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, இது தொடர்பாக சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



