வருங்கால சந்ததியை கல்வியால்தான் உயர வைக்க முடியும் கொடைக்கோன் தியாகி ஐயா அவர்களின் கூற்று

#SriLanka #Lanka4
Kanimoli
1 year ago
வருங்கால சந்ததியை கல்வியால்தான் உயர வைக்க முடியும் கொடைக்கோன் தியாகி ஐயா அவர்களின் கூற்று

பல்கலைக்கழக மற்றும் கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மிகத்தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்விசேட வேலைத்திட்டத்தின் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியல் கல்லூரிகளில் உயர் கல்வியைப் பயிலும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 100 இளநிலை பட்டதாரிகளுக்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய அ.அரவிந்தகுமார் அவர்களின் ஏற்பாட்டில் தியாகி அறக்கொடை நிதியத்தினூடாக கல்விக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 இவ்வேலைத்திட்டத்தின் மூலம் அவர்களின் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் வரை மாதாந்தம் இவ்வுதவித்தொகையினை வழங்குவதற்கு தியாகி அறக்கொடை நிதியம் முன்வந்துள்ளது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார், தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன், ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் ஆகியோர் மக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.