நித்திரையின் போது வரும் ஒருவகை நோய் Central Hypoventilation Syndrome – CCHS பற்றிய விளக்கம்
இந்த நோயால் ஒரு சிலரே பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் தங்களின் உறக்கத்தையும், வாழ்க்கையையும் எவ்வாறு கடத்துகின்றனர் மற்றும் சிகிச்சை முறைகள் எப்படிப்பட்டது என்பது பற்றிய விளக்கம் தந்துள்ளார் ஒரு பிரபல மருத்துவர்
‘‘பொதுவாக ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 10 வீதமளவு முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இது ஏற்படும்.
நித்திரையின் போது நாம் சுவாசிக்கும் சுவாச மாற்றம் இதற்கு காரணமாகலாம். குண்டாக இருப்பவர்களுக்கு இந்த நோயின் ஒரு வகையான ஒபிசிட்டி ஹைபோவென்டிலேஷன் (Obesity Hypoventilation Syndrome – OHS ) ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
உடல் நிறை குறியீடு (body mass index) 30-க்கும் அதிகமாக இருப்பவர்களுக்கும் இந்நோய் பாதிக்கும். இவர்களுக்கு, நுரையீரல் ஒழுங்காக விரிவடையாமல், குறைவாக இருந்தால் இரவில் தூங்கும் போது குறட்டை வருவது அதிகரிக்கும்.
பகலில் துாங்குபவர்கள் அல்லது வாகனத்தை ஓட்டும்போது துாங்குபவர்கள் இந்நோய்க்குரியவராக இருக்கலாம். இவர்களுக்கு, தங்களின் உடலுக்கு தேவையான ஆக்சிஜனின் அளவு குறைவாக இருக்கும்.
பொதுவாக நாம் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்டை ஆக்சைடை வெளியிடுவோம். ஆனால் இந்த நோய் உள்ளவர்கள் CO2 வை வெளிவிடாது அல்லது குறைவாக வெளிவிட்டு உடலில் அதனை தங்க வைத்துவிடுவர். கார்பன்டை ஆக்சைடு நார்கோசிஸ் (Carbon Dioxide Narcosis) என சொல்லப்படும் இந்த நிலையில் இருப்பவர்கள் எப்பொழுதும் சோர்ந்து காணப்படுவார்கள்.
சில சமயம் ஹைபோதைராய்டு பிரச்னையுடன் பிறக்கும் போது குழந்தைகளின் உடல் எடையை பொறுத்தும், தாயின் உடல் நிலையை பொறுத்துமே குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்.
வயதானவர்கள், குறைவான உடல் செயல்பாடுகள், சர்க்கரை நோய், தைராய்டு, ஹைபெர் டென்சன் உடையவர்கள், துரித உணவுகள், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஹைபோவென்டிலேஷன் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இதன் நிலையை கண்டறிய ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு அளவை கண்டறியும் ABG எனப்படும் (Arterial Blood Gas) சோதனையையும் மேற்கொள்ளப்படும்.
இந்த நோய் அறிகுறியாக சுவாச பிரச்சனை பின்னர் ஞாபக மறதி, சுவாசமின்மை காரணமாக பேச முடியாமல் போவார்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து, மனரீதியாகவும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அடிவயிற்றிலிருந்து சுவாசிப்பார்கள். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பார்வையில் கோளாறு போன்றவைகளும் ஏற்படும்.
இந்த ஹைபோவென்டிலேஷன் வருவதால், சில இதய நோய்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக அதிகரித்த இதய துடிப்பு இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் இதய தசைகள் பலமிழந்து Right Heart Failure எனப்படும் இதய நோய் உண்டாகும்.
உயர் ரத்த அழுத்தமும் உண்டாகும். எனவே ஹைபோ வென்டிலேஷனை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து அதற்கான சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த நோய்க்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் விரைவாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறல் உங்களை ஆரோக்கிய வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.