IPL Qualifier02 - 234 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை

#IPL #T20 #Gujarat #Mumbai
Prasu
1 year ago
IPL Qualifier02 - 234 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. 

பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!