அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளையுடன் முடிகிறது

#heat #2023 #Tamilnews #Breakingnews #Summer
Mani
1 year ago
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளையுடன் முடிகிறது

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கடும் வெப்பம் நிலவி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மே 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. கத்திரி வெயிலின் தொடக்க நாள்களில் சற்று குறைவாக இருந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக 110 டிகிரிக்கு வரை அதிகரித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்லாமல், மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வனப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததால், நீரின்றி பல மான்கள் இறந்தன. கத்திரி வெயிலின்போது வேலூர், திருச்சி, மதுரை, கரூர், பாளையங்கோட்டை, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல நாள்கள் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளையுடன் முடிகிறது. கடந்த 3 வாரங்களாக தமிழக மக்கள் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் (மே 28) முடிவுக்கு வருகிறது. இருப்பினும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!