பெர்னின் பிரியன்ஸ் ஏரியில் நேற்று வெள்ளிக்கிழமை இறந்த ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரியன்ஸ் ஏரியில் ஒரு பயங்கர துயர சம்பவம் ஏற்பட்டிருந்தது. அதாவது நேற்று பிற்பகல் 1:30 மணியளவில், பெர்னில் உள்ள மாநில காவல்துறைக்கு, பிரியன்ஸ் ஏரியில் ஒரு இறந்த நபரின் சடலம் காணப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்தது.
அங்கிருந்தவர்கள் அந்த நபரை கரைக்கு இழுத்து விட்டிருந்தனர். அதன் பிறகு அந்த நபர் கடல்சார் காவல்துறை ஊழியர்களால் காப்பாற்றப்பட்டார். உடனடியாக அங்கு சென்ற அவசர மருத்துவரால் அவரது இறப்பை மட்டுமே உறுதி செய்ய முடிந்தது.
பொலிஸாரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர் 53 வயதுடைய சுவிஸ் நபர் எனவும் அவர் Basel-Landschaft மாகாணத்தில் வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னீஸ் ஓபர்லேண்டில் உள்ள பிராந்திய அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மரணத்தின் சூழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் ஒரு விபத்தை சுட்டிக்காட்டுகின்றன.