நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக மெக்கானிக் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

#Police #Murder #Marriage #Tamilnews #Breakingnews
Mani
1 year ago
நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக மெக்கானிக் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் மெக்கானிக் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட் பட்ட பெருமாள் நகர் 10-வது தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய் யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர். அதே தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (25) என்பதும், அவர் மோட் டார் சைக்கிள் மெக்கானிக் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த கொலை குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையான வெங்கடேசன் அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார் (24), தினேஷ் (24) மற்றும் கரண் ஆகிய 4 பேரும் நெருங்கிய நண்பர்கள். இதற்கிடையில் நரேஷ்குமாரின் மனைவிக்கும், வெங்கடேசனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனையறிந்த நரேஷ்குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். நண்பர்கள் 3 பேரும் மீண்டும் வெங்கடேசன் உடனான நட்பை முறித்து கொண்டனர். இந்தநிலையில் தனது மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த வெங்கடேசனை தீர்த்துக்கட்ட நரேஷ்குமார் முடிவு செய்தார். இதற்காக கடந்த ஒரு வாரமாக வெங்கடேசன் உடன் நட்பாக பழகியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 4 பேரும் பெருமாள் நகர் 10-வது தெருவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறிய தும் அவர்களுக்குள் கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட் டது. அப்போது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வெங்கடே சனை அரிவாளால் சரமாரியாக தலைப்பகுதியில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாப இறந்தார். பின்னர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று தினேஷ் மற்றும் நரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கரணை தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!