தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

#Rain #HeavyRain #Tamilnews #Breakingnews
Mani
11 months ago
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 27) சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளிலும், வரும் 28, 29-ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும்இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.