ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கு இன்று முதல் நிலை தேர்வு
#Student
#Tamil Student
#students
#Tamilnews
#Examination
Mani
1 year ago

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர்பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன்படி நடப்பாண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத நாடு முழுவதும் 7லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நடைபெறுகிறது.



