நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்
நிலக்கடலை நன்மைகள்:
இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை சீராக செயல்படும். கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.எலும்பு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது.
மூளை சிறப்பாக செயல்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் சரியாகும். கொழுப்பை குறைக்கும்.
மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். இதில் உள்ள வைட்டமின் 3 நியாசின் ஞாபக சக்திக்கு பெரிதும் பயனளிக்கிறது
நிலக்கடலையை ஊறவைத்து பால் எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதை போல் சாப்பிட்டு வந்தால் ஆண்மை வீரியம் அதிகரிக்கும்.
கருப்பை பிரச்சனைகள் ஏற்படாது. உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். உடலை வலுபடுத்தும். இதயத்தை வலுபடுத்தும். உடலுக்கு நோய் எதுவும் வராமல் தடுக்கும்.