பெண்கள் ரெட் வைன் குடிப்பதால் உண்டாகும் உடல் மாற்றங்கள்.
ரெட் வைன் உடலில் தேவையில்லாமல் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ரோலை குறைத்து கொலஸ்ரோல் பாதிப்பால் அவதிப்படுபவருக்கு நற்பயனைக் கொடுக்கிறது.
ரெட் வைனில் உள்ள பொலிபினால்ஸ் கலவையானது குருதியில் குளுக்கோஸ் அளவைக்கட்டுப்படுத்துகிறது. பெண்கள் மாலையில் ஒரு கப் ரெட் வைன் குடித்தால் சர்க்கரை அளவு 30சதவீதம் கட்டுப்படுத்தப்படும்.
ரெட் வைனின் ரெஸ்வராரொல் கலவை உடலில் கொழுப்பைக் குறைக்கவல்லது. அத்துடன் ரெட் வைனை அளவாக பெண்கள் அருந்தினால் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதிகமாக குடிப்பதனால் எடை கூடுகிறது.
மனவழுத்தத்தினை குறைக்கவும் சிறந்த பானமாக ரெட் வைன் திகழ்கிறது. நீண்ட நேர வேலைக்குப்பின் மன அழுத்தத்தினைப் போக்க இரவு உணவுடன் ஒரு கிளாஸ் வைன் அருந்துவது நல்ல பலனைத்தரும்.
பெண்களின் எலும்புகளை வலுப்படுத்தவும் முக்கியமாக 35 வயதிற்குப்பிறகு எலும்புகளின் அடர்த்தி குறைவதனால் வலுவிழப்பின்றி இருக்க அதைத்தடுக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதில் உள்ளன.
பெண்களின் பார்வையை சிறந்த நிலையில் வைத்திருக்க ரெட் வைனில்அதன் கூறுகள் உள்ளன.