இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

#SriLanka #Tamilnews #Gold #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

இந்நிலையில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை உதவியுடன் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பதிவு எண் இல்லாமல், கடலில் அதிவேகமாக வந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர், படகில் இருந்த 3 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில், அவர்களிடமிருந்து நான்கு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வேதாளையைச் சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது.

அத்துடன், நாட்டுப்படகில் வந்தவர்கள் சுமார் 20 கிலோ கடத்தல் தங்கத்தை கடலில் போட்டனரா அல்லது வேறு ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!