ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தில் வரலாறு காணாத மழை
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு மே மாதம் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த முறை வடமேற்கு இந்தியாவில் பெய்த பருவமழை அல்லாத மழைப்பொழிவு மற்றும் பிற காரணங்களால், 62.4 மிமீ மழை பெய்துள்ளது.
கடந்த 1917-ம் ஆண்டு மே மாதத்தில் 71.9 மிமீ மழை பதிவானதைத் தொடர்ந்து தற்போது தன அதிகளவில் மழை பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் மே மாதம் அதிகளவில் மழை பெய்கிறது.
இன்று பிகானேர், ஜோத்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஜூன் 5,6 வரை மழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் இருந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.