ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#India
#Tamil Nadu
#ChiefMinister
Mani
1 year ago
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு மற்றும் சென்னை ரயில்கள் உட்பட மூன்று ரயில்கள் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் 233 பயணிகள் உயிரிழந்ததாகவும், 900 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து, செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு முதல்வர் செல்வதை ரத்து செய்தது உள்ளிட்டவை அடங்கும்.
ஓமந்தூரார் கருணாநிதி நினைவிடத்துக்குச் செல்வதும், சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் மட்டுமே நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசா ரயில் விபத்து குறித்து இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழிலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.