ஒடிசாவில் ரயில் விபத்தில் 233 பேர் உயிரிழப்ப! 900 பேர் காயம்
ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மாலை தடம் புரண்ட மற்றொரு ரயிலின் பெட்டிகள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 200 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900 பேர் காயமடைந்தனர்.
மூன்றாவது சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார்.
சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றான இந்த விபத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை அடங்கும்.
தற்போதைய தகவல்களின் படி , கொல்கத்தாவிற்கு தெற்கே 250 கிமீ மற்றும் புவனேஸ்வருக்கு 170 கிமீ வடக்கே உள்ள பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த விபத்தில் இறப்பு எண்ணிக்கை 233 ஆக உள்ளதுடன் சுமார் 900 பேர் காயமடைந்தனர் எனவும் ஒடிசா தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்கு விமானப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.