வானவில் வண்ண இயற்கை உணவுகள்!
உணவில் பல்வேறு வண்ணங்களை கொண்ட காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்வது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்யும். வானவில் போன்ற ஏழு நிறங்களை ஒத்திருக்கும் காய்கறிகள், பழங்களை உள்ளடக்கிய ‘ரெயின்போ டயட்’ உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. தினமும் சாப்பிடும் உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்து பொருட்களையும் சேர்ப்பது கடினமானது. வானவில் உணவுகளை தவறாமல் உட்கொள்வதன் மூலம் அந்த குறையை போக்கலாம்.
சிவப்பு
சிவப்பு நிற பழமும் காய்கறியும் உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கு நன்மை சேர்க்கக்கூடியவை. இவற்றில் சைட்டோ கெமிக்கல்ஸ் போன்ற சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை இதயத்திற்கு ஆரோக்கியமானவை. தக்காளி, ஆப்பிள், மாதுளை, வெங்காயம், பீட்ரூட், செர்ரி, சிவப்பு மிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்றவை சிவப்பு நிற உணவுபொருட்களாகும்.
பச்சை
கீரை, முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி, குடை மிளகாய், வெந்தய கீரை, ப்ராக்கோலி போன்றவை பச்சை நிற உணவுப்பொருட்களில் முக்கியமானவை. இவற்றில் அதிக அளவில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்சிடென்டுகள் உள்ளன. மேலும் பச்சை காய்கறிகளின் இலைகளில் குளோரோபில் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மூலப்பொருளாகும். பச்சை நிற காய்கறிகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். புற்றுநோயை தடுக்கும்.
வெள்ளை
வெள்ளை நிறத்தில் இருக்கும் காய்கறிகளும் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உள் உறுப்பு அமைப்பை வலுவாக உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. உருளைக்கிழங்கு, வாழைப்பழம், பூண்டு போன்ற உணவுப் பொருட்கள் இதய நோய்கள், கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க உதவும். காலிபிளவர், காளான் போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிட வேண்டும்.
மஞ்சள்
சோளம், எலுமிச்சை, மஞ்சள் நிற குடைமிளகாய், மாம்பழம், அன்னாசி போன்றவை மஞ்சள் நிற உணவு பொருட்களில் முக்கிய மானவை. இவை புரோமைலின், பாப்பேன் போன்ற மூலக்கூறுகளை கொண்டிருக்கின்றன. இந்த மூலக்கூறுகள் செரிமான அமைப்பை பாதுகாக்கவும், துரிதமாக செயல்படவும் உதவும். மேலும் இந்த நிற பழங்களும் காய்கறிகளும் கண்களின்
ஆரஞ்சு
கேரட், ஆரஞ்சு, பப்பாளி போன்ற ஆரஞ்சு நிற பொருட்களில் கெரோட்டின் இருப்பதால் இவையும் கண்பார்வையை மேம்படுத்த உதவும். மேலும் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சுவையாக இருப்பதோடு உடல் வளர்ச்சிக்கும் துணைபுரியும். பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற ஆரஞ்சு நிற உணவு பொருட்களையும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
நீலம்
பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, கத்தரிக்காய், ஊதா நிற காலிபிளவர், பேஷன் புரூட் போன்ற நீலம் மற்றும் ஊதா நிற காய்கறிகளும், பழங்களும் இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.