விஜய்க்கு போட்டியாக களத்தில்குதிக்கும் சூர்யா
விஜய் இப்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளிவர இருக்கிறது.
அதற்கு முன்பாகவே தளபதி 68 பட அறிவிப்பும் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இப்படி சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருக்கும் விஜய் அரசியல் களம் காணவும் தயாராகி வருகிறார். அதற்கான முன்னேற்பாடாகவே தற்போது பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கும் முயற்சியிலும் இவருடைய மக்கள் இயக்கம் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறது.
அதற்கு முன்பாகவே உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பல மாநிலங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவும் வழங்கப்பட்டது. இப்படி தன்னுடைய அடுத்தடுத்த அதிரடி செயல்களால் விஜய் தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க தற்போது இவரை போலவே நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு கட்டாயம் வருவார் என்று வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஏற்கனவே சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் முக்கிய கட்சி ஒன்று தீவிரம் காட்டியதாக குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமின்றி சூர்யாவின் உறவு வட்டாரத்தை வைத்து அவருடைய மூளையை கழுவும் முயற்சியிலும் அந்த கட்சி ஈடுபட்டதாம். ஆனால் இடையில் நடந்த ஒரு சம்பவம் இதை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
அதாவது ஒரு முறை ஜோதிகா கோவிலுக்கு கொடுக்கும் பணத்தை மருத்துவமனைக்கு கொடுங்கள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்ப்பும் நிலவியது. இதன் காரணமாகவே சம்பந்தப்பட்ட கட்சி சூர்யாவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.
இருப்பினும் தற்போது சினிமாவில் ஒரு உயரத்தை அடைந்த நடிகர்கள் அனைவரும் தங்கள் பார்வையை அரசியல் பக்கம் திருப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய் எப்போது வேண்டுமானாலும் தன் அரசியல் என்ட்ரியை கொடுக்கலாம் என இருக்கும் இந்த நிலையில் சூர்யா கட்டாயம் அரசியலுக்கு வருவார் எனவும் அவர் கூறியிருக்கிறார். அது இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் இவருடைய வருகை நிச்சயம் இருக்கும் என அவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.