நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமானால் யாது செய்ய வேண்டும்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #morning #லங்கா4 #முறை
Mugunthan Mugunthan
11 months ago
நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமானால் யாது செய்ய வேண்டும்

அதிகாலையில் விழித்தல் உடலுக்கு மிகவும் ஆரோக்கயமானது மட்டுமல்ல நமது நாளாந்த கடமைகளை வேளைக்கு முடிக்கவும் சுறுசுறுப்பாக இயங்கவும் வழிவகுக்கும்.

அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்லிக் கொண்டால், குறித்த நமது நேரத்திற்கு அண்மையில் நமது மூளையில் சுரக்கும் ஓமோன்கள் நம்மை எழுப்பிவிடும்.

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திரிக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும்.

மேலும் அலாராம் ஒழுங்கு செய்து துாங்குவதனாலும் நீங்கள் எழும்பி விடலாம். உதாரணமாக உங்கள் தொலைபேசியை துாங்கும் போது அருகில் வைப்பவராயின் அதில் ஒரு அலார மணியை ஒலிக்க விடலாம். இவ்வாறும் நீங்கள் அதிகாலையில் வேளைக்கு எழும்பப் பழகலாம். 

தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது நமது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து நிதானம் அடைந்தபிறகு எழுந்து செல்லலாம்.

 இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழும்ப முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டால் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம்.

எனவே நீங்களும் காலையில் எழும்ப சிரமப்பட்டால் மேற்கூறிய முறைகளில் ஒன்றை செய்து வேளைக்கு எழும்பி காரியங்களை ஆறுதலாகவும் நிதானமாகவும் செய்து வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்லலாம்.