பள்ளி மாணவிகள் 80 பேருக்கு விஷம் வைப்பு; ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி!

#world_news #Poison #students #Tamilnews #Breakingnews #School Student
Mani
2 years ago
பள்ளி மாணவிகள் 80 பேருக்கு விஷம் வைப்பு; ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் இரண்டு ஆரம்ப பள்ளிகளில் நடத்தப்பட்ட விஷத் தாக்குதல்களில் 80 சிறுமிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. . பெண்கள் பூங்காக்கள் செல்ல தடை, ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லத் தடை, டிவி ஷோக்களில் நடிக்க தடை, ஆண்கள் துணையில்லாமல் நடக்க தடை, உயர்கல்வி படிக்க தடை என பல அடக்குமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. சிறுமிகள் மீது விஷத்தாக்குதல் நடைபெற்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் படிக்கும் பள்ளிகளில் மாணவிகளுக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவு இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து குறிப்பிட்ட மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி விடுத்த செய்திக்குறிப்பில் நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கோ பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் . மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர சம்பவத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டனர். எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!