மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகி , யோசித்து செயல்பட வேண்டிய மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகி , யோசித்து செயல்பட வேண்டிய மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வியாபாரத்தை விருத்தி செய்யும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.வருமானம் அதிகரிக்கும். பரணி : நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். கார்த்திகை 1 : அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : பண வரவில் இருந்த தடை அகலும். பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். தந்தை வழியில் அனுகூலம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : திட்டமிட்ட செயல் வெற்றியாகும். எதிர்பாராத வருமானம் வரும். லாபமான நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகளில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள். திருவாதிரை : அரசு வழியில் சில சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும் நாள். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.வருமானத்தில் இருந்த தடை விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம் : பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். ஆயில்யம் : பெரியோர்கள் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.

சிம்மம்

மகம் : உடல்நிலை சீராகும். வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. பூரம் : பகைவர்கள் தொல்லை நீங்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி நண்பர்கள் ஒத்துழைப்பால் நிறைவேறும் நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்தவை அனுகூலமாகும். அஸ்தம் : வியாபாரத்தில் இருந்த தடை விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள். சித்திரை 1,2 : நண்பர்கள் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.

துலாம்

சித்திரை 3,4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சில செயல்கள் இன்று இழுபறியாகும். சுவாதி : அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். விசாகம் 1,2,3 : அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்

விசாகம் 4 : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். பயணத்தால் நன்மை உண்டு. வழக்கு உங்களுக்கு சாதகமாகும். அனுஷம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவர். நன்மையான நாள். கேட்டை : எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தினர் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். 

தனுசு

மூலம் : வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற சூழல் உண்டாகும். அவசரப்படுவதை தவிர்க்கவும். பூராடம் : வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். உத்திராடம் 1 : கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். திருவோணம் : உங்கள் அணுகுமுறையால் நன்மைகளை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : வீண் செலவுகளை சந்திப்பீர்கள். நிதானமாகப் பேசி நன்மைகள் அடைய வேண்டிய நாள். சதயம் : வாகனத்தை சரி செய்வீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். செலவுகள் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். உத்திரட்டாதி : பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ரேவதி : நீண்ட நாட்களாக நீங்கள் மேற்கொண்டிருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.