தேசிக்காய்த் தண்ணீர் கோடையை தணிக்க குடிப்பது ஆபத்தானதா?
நம் நாட்டில் பலர் கோடைகாலங்களில் வெப்பத்தினை தணிக்க தேசிக்காய் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் தொடர்ந்து அதிகமாக குடித்து வந்தால் உடலிற்கு ஆபத்தை உண்டு பண்ணலாம்.
வெறும் வயிற்றில் முக்கியமாக இதனைப்பருகும் போது சமிபாட்டு பாதிப்புகள் வரலாம். அத்துடன் வயிற்றில் வலியை உண்டாக்கவும் வல்லது.
தேசிக்காய் தண்ணீரானது உடலின் நச்சுக்களை வெளியேற்றினாலும் இது அடிக்கடி சிறுநீரை கழிக்க செய்து நீரிழப்பை உடலில் ஏற்படுத்தி சிறுநீர்ப்பையை வீங்கச்செய்யும்.
நீங்கள் தேசிக்காய் தண்ணீர் குடிக்கும் போது பற்களில் கூச்ச உணர்வை உணர்ந்திருப்பீர்கள். இது காலப்போக்கில் அதனது அமிலத்தன்மையால் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிக தேசிக்காய் தண்ணீரானது அதன் சிற்றிக்கமில செறிவு கூடினால் வயிற்றில் அல்சர் ஏற்பட இடமுண்டு.
தலையில் முடி உதிர்தல் மற்றும் ஒற்றைத்தலைவலி என்பவற்றை ஏற்படுத்தலாம். எனவே ஒரு நாளைக்கு 2 கிளாஸ் தேசிக்காய் தண்ணீரை விட அதிகமாக தினமும் அருந்துதல் ஆபத்து.