Test Final - முதல்நாள் முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி

#India #Australia #Test #Cricket
Prasu
1 year ago
Test Final - முதல்நாள் முடிவில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார்.

இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடினார். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார். தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. 

தொடர்ந்து விளையாடிய ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை ஆஸ்திரேலியா குவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!