அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். பரணி : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். வருவாய் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். கார்த்திகை 1: வராமல் இருந்த பணம் வந்து சேரும். நட்பின் வழியே நன்மை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். ரோகிணி : தடைபட்டிருந்த செயல்களை இன்று மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2 : குடும்பத்தினர் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். திருவாதிரை : ஒரு பிரச்னை தீரும் என்றாலும் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதலுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள். பூசம் : உங்கள் எண்ணம் நிறைவேறும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம் : நண்பர்கள் துணையுடன் ஒரு முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பூரம் : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1 : மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வந்தோர் விலகிச் செல்வார்கள்.கவனம் தேவை.

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் முயற்சி ஒன்று லாபமாகும். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அஸ்தம் : புதிய தொழில் தொடங்க பணம் திரட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவு நன்மையை வழங்கும். சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடி வரும். உதவி கேட்டு ஒருவர் உங்களை சந்திப்பார். லாபமான நாள். 

துலாம்

சித்திரை 3,4 : புதிய வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி : உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். விசாகம் 1,2,3: புதிய சொத்து வாங்கும் எண்ணம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். 

விருச்சிகம்

விசாகம் 4 : கவனத்துடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அனுஷம் : உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள். கேட்டை : புதிய முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். 

தனுசு

மூலம் : நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். நிதிநிலை உயரும். பூராடம்: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பண வரவில் இருந்த தடை விலகும். உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர்கள் விலகுவார்கள். உங்கள் செயல் முன்னேற்றமாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். திருவோணம் : கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : தொலைந்த பொருள் கிடைக்கும். வேலையில் மனமாற்றம்ஏற்படும். செயலில் குழப்பம் அதிகரிக்கும். சதயம் : மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாக நினைத்து வருந்துவீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இல்லையெனில் இழப்புகள் ஏற்படும். 

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் செயலில் லாபம் உண்டாகும். மூத்தோர் ஆதரவால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்திரட்டாதி : குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். ரேவதி : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்