நடுநிலையான பாதக்குளியல் நீர்ச்சிகிச்சையும் அதனால் நிவர்த்தியாகும் உடற்குறைகளும்

#Health #Disease #Lanka4 #ஆரோக்கியம் #bath #நோய் #லங்கா4
நடுநிலையான பாதக்குளியல் நீர்ச்சிகிச்சையும் அதனால் நிவர்த்தியாகும் உடற்குறைகளும்

வெதுவெதுப்பான நீரில் 10 – 20 நிமிடம் வரை கால்களை ஊறவைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன அதாவது நடுநிலையான பாதக்குளியல் என்ற இந்த வகையான நீர்ச்சிகிச்சையினால் நாம் சில நமது குறைபாடுகளினை நிவர்த்தி செய்யலாம்.

முதலாவதாக குதிக்கால் வெடிப்புள்ளவர்கள் கால் சூடு பொறுக்குமளவில் காலை ஒரு அகன்ற வாளியில் சுடு நீர்,  அதில் 1 தேக்கரண்டி கல் உப்பு அல்லது 1 தேக்கரண்டி சோடா உப்பு அல்லது 1 தேக்கரண்டி நீலகிரித் தைலம் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர், கால்களை சுத்தமாக கழுவிவிட்டு, சுடுதண்ணீரில் 10-20 நிமிடம் வரை வைத்திருந்து எடுக்க வேண்டும். பின்னர் கால்களை நன்றாக துடைத்துவிட்டு, தேங்காய் எண்ணெயை தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குதிகால் வெடிப்பு பிரச்னையும் சரியாகும்.

இரண்டாவதாக மன அழுத்தம் அல்லது தலைவலியால் அவதிப்படுவோர் இந்த பாத குளியல் எனும் காலுக்கான நீர்சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நல்ல நிவாரணம் தெரியும். இவர்கள் இதனை மேற்கொண்ட பின்னர் நன்கு மூச்சை இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு 6-10 முறை செய்து விட்டு நித்திரைக்கு சென்றால் நல்ல துாக்கம் வரும்.

 மூன்றாவதாக பெண்கள்தான் நிறைய அளவில் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் இந்த நடுநிலையான பாத குளியலை எடுத்துக்கொண்ட பிறகு, கால்களை துடைத்துவிட்டு, கணுக்கால்களை மேலும், கீழுமாக இடது , வலது புறமாகவும் 5-6 முறை அசைக்க வேண்டும். பின்னர், கால்களை 5-6 முறை சுழற்ற வேண்டும். பின்னர் கால்களை மேலே தூக்கி வைத்து, கைளால் உள்ளங்காலில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தினமும் தூங்குவதற்கு முன் செய்து வந்தால், நாளடைவில் குதிகால் வலி நன்கு குறையும்.

மேலே சொன்னது போன்று செய்துவர தலைவலி, தூக்கமின்மை, குதிகால்வலி, மன அழுத்தம் எல்லாவற்றுக்குமே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். முயற்சிசெய்து பாருங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!