விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடையும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடையும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பரணி : தொழிலில் இருந்த தடை விலகும். புதிய முயற்சி நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும். கார்த்திகை 1 : உங்கள் செயல்கள் வெற்றியாகும். பொருளாதார நிலை சீராகும். நண்பர்கள் உதவியால் சங்கடம் நீங்கும்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இழுபறியாக இருந்த செயல்கள் முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2 : உங்களை விட்டு விலகிச் சென்றவர் மீண்டும் வருவார்கள். கூட்டுத்தொழில் பற்றி சிந்திப்பீர்கள்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4 : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். திருவாதிரை : பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3 : வியாபாரத்தில் புதிய தொடர்பு உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். பூசம் : உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் கவனம் அவசியம். ஆயில்யம் : மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். 

சிம்மம்

மகம் : கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி உங்களுக்கு நீங்கும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும். பூரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உத்திரம் 1 : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். அஸ்தம் : விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் உண்டான சங்கடம் விலகும். சித்திரை 1,2: மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். 

துலாம்

சித்திரை 3,4 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி : செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து குறித்த பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம் : உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. கேட்டை : வேலைத்தேடி வந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும் 

தனுசு

மூலம் : குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பூராடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1 : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பர். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். திருவோணம் : தடைபட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பப்படி செயல்படுவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : குழப்பம் அதிகரிக்கும். செயல்கள் இழுபறியாகும். தெரியாத நபர்களிடம் எச்சரிக்கை அவசியம். சதயம் : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3 : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விழிப்புடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரட்டாதி : செயல்கள் இழுபறியாகும். யாருடனும் இன்று விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ரேவதி : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.