குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி . விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வரும் தனுசு ராசியினர் - ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி . விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வரும் தனுசு ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : மதியம் வரை உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. வரவு அதிகரிக்கும் நாள். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் காலையில் வரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். கார்த்திகை 1 : உங்கள் செயல்கள் வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட இடையூறு வந்து சரியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காணும் நாள் ரோகிணி : வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். நிதிநிலை உயரும். மிருகசீரிடம் 1, 2 : உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : பெரியோர் ஆதரவுடன் திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருவாதிரை : பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடைகள் அகலும். புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து சேர்வார்கள். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். நிதிநிலை உயரும். பூசம் : செயல்களில் இருந்த தடை விலகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம் : மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது.

சிம்மம்

மகம் : மதியம் வரை உங்கள் எண்ணம் பூர்த்தியாகும் அதன்பின் செயல்களில் சங்கடமும் நெருக்கடியும் அதிகரிக்கும். பூரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். உங்களுக்கு மகிழ்ச்சியான செயல்நடைபெறும் நாள். உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4 : ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். நண்பர்கள் உதவியால் ஒரு செயல் லாபமாகும். அஸ்தம் : வியாபாரத்தில் உண்டான சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும் நாள். சித்திரை 1, 2 : முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3, 4 : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி : செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். கோயிலுக்கு சென்று வருவீர்கள். விசாகம் 1, 2, 3 : சொத்துப்பிரச்னை ஒன்றினை பேசி தீர்வு காண்பீர். உங்கள் முயற்சிக்கு உறவினர்கள் உறுதுணையாவர்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். அனுஷம் : குடும்பத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கேட்டை : தேவையற்ற சங்கடம் உங்களைத் தேடி வரும். அக்கம் பக்கத்தினரிடம் வீண் விவாதம் வேண்டாம்.

தனுசு

மூலம் : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான நாள். பூராடம் : பொழுது போக்கில் இணையும் நீங்கள் நண்பர்களுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1 : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விலகிச் சென்ற உறவினர் உங்களைத்தேடி வருவார்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம் : வருவாயில் இருந்த தடை நீங்கும். உங்கள் செயல் எளிதில் நிறைவேறும். நினைத்ததை அடைவீர் அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் நாள்.

கும்பம்

அவிட்டம் 3, 4 : இன்று நல்லெண்ணம் கொண்டோர் உங்களை தேடி வருவர். சில உதவிகளையும் கேட்பர். சதயம் : உங்கள் எதிர்பார்ப்பில் ஒன்று தள்ளிப்போகும் என்றாலும் திடீர் வரவால் தேவைகள் பூர்த்தியாகும். பூரட்டாதி 1, 2, 3: காலையில் இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும். எதிர்பாராத வரவு மகிழ்ச்சிப்படுத்தும்.

மீனம்

பூரட்டாதி 4 : புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரட்டாதி : மதியம் வரை நெருக்கடி நீடிக்கும். குழப்பம் அதிகரிக்கும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி : உங்கள் மனம் மகிழும் படியான நிலை மதியத்திற்கு மேல் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.