தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. போட்டியாளர்களால் சில சங்கடங்களை அடைவீர்கள். பரணி : குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். கார்த்திகை 1: பணியிடத்தில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ரோகிணி : நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். மிருகசீரிடம் 1,2 : எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயமாகும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். திருவாதிரை : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசு வழியில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். புனர்பூசம் 1,2,3 : வியாபாரத்தில் இருந்து வந்த தடைகளை சரி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் : தடைபட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம் : வியாபாரத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். மற்றவர்களின் மறைமுக சதிகளை முறியடிப்பீர்கள்.

சிம்மம்

மகம் : உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். பூரம் : செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். பணியிடத்தில் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உத்திரம் 1: மற்றவர் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும். முயற்சியில் விழிப்புணர்வு அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம் : வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும். சித்திரை 1,2: உங்கள் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று முடியும்.

துலாம்:

சித்திரை 3,4 : போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்ப்புகளை முறியடித்து உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். சுவாதி : சிந்தித்து செயல்படுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் நன்மை காண்பீர்கள். விசாகம் 1,2,3 : பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. அனுஷம் : தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை : திட்டமிட்டு செயல்பட தொடங்குவீர்கள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

தனுசு:

மூலம் : உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர். எதிர்பார்த்த லாபம் காணும் நாள் பூராடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர்கள். உத்திராடம் 1 : திட்டமிட்ட செயல்களால் வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : துணிச்சலுடன் செயல்பட்டு நீண்டநாள் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். திருவோணம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு வரும் நாள். அவிட்டம் 1,2 : புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நல்லது

கும்பம்

அவிட்டம் 3,4 : தடைபட்டிருந்த வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். சதயம் : சுறு சுறுப்புடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும். பூரட்டாதி 1,2,3 : குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உத்திரட்டாதி : உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். செலவுகள் கட்டுக்குள் வரும். வருமானம் திருப்தி தரும். ரேவதி : நீங்கள் மேற்கொள்ளும் ஒரு முயற்சியில் விழிப்புணர்வு அவசியம். நிதி நிலை சீராகும்.