ஏழாமிட குருவால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
ஏழாமிட குருவால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். நண்பர்கள் உதவியால் ஒரு செயல் முடிவு பெறும்நாள். பரணி : உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். பெரியவர்கள் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை 1 : அரசு வழி முயற்சியில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : எதிர்பார்ப்பு இழுபறியாகும். நண்பர்களை சந்தித்து புதிய முயற்சிக்கு திட்டமிடுவீர்கள். ரோகிணி : வருமானம் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவீர். மிருகசீரிடம் 1,2 : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி வெற்றியாகும். செலவில் கவனம் தேவை.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வரவு வரும். மகிழ்ச்சியான நாள். திருவாதிரை : நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். புனர்பூசம் 1,2,3 : உங்களை விட்டு விலகிச் சென்ற ஒருவர் மீண்டும் உங்களைத் தேடி வருவார். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4 : தடைகள் விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூசம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். நன்மையான நாள். ஆயில்யம் : நண்பர்கள் உங்கள் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள். நிம்மதியான நாள்.

சிம்மம்

மகம் : இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம் : தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். கடவுள்வழிபாடு மகிழ்ச்சி தரும். உத்திரம் 1 : உங்கள் முயற்சி வெற்றி பெறும். அரசு வழியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் செயல்களில் நெருக்கடி தோன்றும். முயற்சியில் அக்கறை கொள்வது அவசியம். அஸ்தம் : உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். சித்திரை 1,2 : குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவி வரும். நெருக்கடி நீங்கும்.

துலாம்

சித்திரை 3,4 : ஏழாமிட குருவால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி : குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். மகிழ்ச்சி கூடும். விசாகம் 1,2,3 : இதுவரை இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சி லாபம் தரும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விசாகம் 4 : தடைகளை விலக்கி வைத்து புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம் : நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி நன்மையாகும். கேட்டை : மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

மூலம் : குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர். வருமானம் அதிகரிக்கும். பூராடம் : எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1 : எதிர்பார்த்த மகிழ்ச்சியை அடைவீர்கள். மனதில் இருந்த சங்கடம் விலகும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4 : பயணத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள். திருவோணம் : புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : எதிர்பார்த்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர். உங்கள் கனவு நிறைவேறும். வருமானம் மகிழ்ச்சி தரும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். சதயம் : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1,2,3 : சகோதரர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : எதிர்பார்த்த வரவு வரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும் நாள். உத்திரட்டாதி : நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.