உணவிற்காக சோற்றை நுகருவோருக்குரிய எச்சரிக்கை!
மூன்று வேளையும் தற்காலகட்டத்தில் நம் நாட்டில் சோறு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மூன்று வேளையும் சோறு சாப்பிடும் குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சோற்றை எப்படிச் சாப்பிடுவது? சாப்பிடும் போது என்ன தவிர்க்க வேண்டும் ? என்ன செய்ய வேண்டும் ? என்பனவற்றை இன்றைய பதிவில் காணலாம்.
ஆரோக்கிய நிபுணர்கள் கூற்றுப்படி வாழ்வுக்கு அரிசியை வேகவைத்து சாப்பிடுவதே நல்லது. இந்த முறையில் அரிசியை வடித்த சோறாகவோ அல்லது இட்லியாகவோ சாப்பிடலாம்.
சுத்திகரிக்கப்பட்ட அரிசியை வாங்கக்கூடாது. இவைகளின் நுகர்வு அதிக கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்தத்தில் குளுக்கோசை அதிகரித்து நீரிழிவிற்கு வழிவகுக்கும் அல்லது கூட்டும்.
ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி அரிசி ஆலையில் கைக்குத்தல் அரிசி வாங்கிச் சாப்பிடுவது கூடுதல் நன்மை அளிக்கும். இந்த கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து இழப்பு குறைவாக இருப்பது இதற்கு காரணம்.
அரிசியை அவித்து சோறாக சாப்பிடும் போது குறிப்பாக மூன்று வேளையும் அதனை குறைத்து சாப்பிடுதல் நல்லது. அல்லாவிட்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு.
இதனால் அதிக சோற்று நுகர்வு இதய செயலிழப்பு அல்லது எடை காரணமாக இதய நோய்கள் வரலாம்.
சோற்றை சாப்பிடும் போது ஊட்டச்சத்து குறைபாட்டை ஈடு செய்ய, காய்கறிகள் மற்றும் பருப்பு சோ்த்து சாப்பிடலாம்.
மேலும் முதியவர்கள் உள்ள குடும்பங்களில் அவர்களுக்கு சோற்றை குழைய வைத்து கொடுப்பதால் சமிபாட்டு பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்..