அதிஷ்டம் கிட்டவுள்ள இரண்டு ராசிக்காரர்கள் - அதிலும் கடக ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அதிஷ்டம் கிட்டவுள்ள இரண்டு ராசிக்காரர்கள் - அதிலும் கடக ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலன் தரும். சிந்தித்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது. கார்த்திகை 1 : பணிபுரியும் இடத்தில் மறைமுக தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். விழிப்புணர்வு அவசியம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். ரோகிணி : அரசு வழி செயலில் இழுபறி உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நாள். மிருகசீரிடம் 1,2 : அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சி நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். திருவாதிரை : நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : புதிய வாகனம் வாங்குவீர்கள். பணி புரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்

புனர்பூசம் 4 : தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூசம் : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம் : இறை வழிபாட்டில் மனம் செல்லும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

சிம்மம்

மகம் : குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் அடைவீர். பூரம் : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகள் இன்று எளிதாக நிறைவேறும். நிதிநிலை உயரும். உத்திரம் 1 : உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். அதிகாரியின் ஆதரவு உண்டு.

கன்னி

உத்திரம் 2,3,4 : நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை செய்வீர்கள். அஸ்தம் : எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். சித்திரை 1,2 : செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். சுவாதி : உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை இன்று அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள். விசாகம் 1,2,3 : விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். 

விருச்சிகம்

விசாகம் 4 : நீண்டநாள் முயற்சி ஒன்று எளிதாக நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். அனுஷம் : அலுவலகத்தில் உங்கள் பொறுப்பு கூடும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். செல்வாக்கு உயரும். கேட்டை : நினைத்ததை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். தொழிலில் வரவு அதிகரிக்கும். 

தனுசு

மூலம் : உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பூராடம் : எதிர்காலத்திற்குரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்திராடம் 1 : புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் நீங்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும். திருவோணம் : உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகளை சமாளித்து வெல்வீர்கள். லாபமான நாள். அவிட்டம் 1,2 : நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்று இழுபறிக்குப்பின் நிறைவேறும். மவுனம் அவசியம். 

கும்பம்

அவிட்டம் 3,4 : வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாக்கும். சதயம் : நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : குடும்பத்தினர் நலனுக்காக தீவிரமான முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். 

மீனம்:

பூரட்டாதி 4 : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் புதிய இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். உத்திரட்டாதி : நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். வேலையிடத்தில் பொறுப்புகள் கூடும் நாள். ரேவதி : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முதலீட்டில் வருமானம் அதிகரிக்கும். நன்மையான நாள்.