நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயலில் லாபம் அதிகரிக்கும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயலில் லாபம் அதிகரிக்கும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: வழக்கத்தை விட கவனமுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எண்ணம்போல் செயல்படுவீர்கள். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். ரோகிணி: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பப் பிரச்னை தீரும். மிருகசீரிடம் 1,2: உங்கள் சுய ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பயணத்தில் கவனம் தேவை. நிதானமாகச் செயல்படுவதால் நன்மையுண்டாகும். திருவாதிரை: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சிலர் திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். லாபமான நாள் பூசம்: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: நட்பு வட்டம் விரிவடையும். வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும்.

சிம்மம்

மகம்: வியாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபமான நாள். உத்திரம் 1: தொழிலில் இருந்த தடைகள் விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். அஸ்தம்: குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: தீராமல் இருந்த ஒரு பிரச்னை பெரியோர் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.

துலாம்

சித்திரை 3,4: ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். குழப்பம் கூடும். அமைதி காக்க வேண்டிய நாள். சுவாதி: செயல்களில் இழுபறி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். யோசித்து செயல்பட நன்மையாகும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பார்த்ததை அடைவீர்கள். நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: திருமண வயதினருக்கு வரன் குறித்த செய்தி வீடு தேடி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்டை: கூட்டுத்தொழில் முயற்சி லாபம் தரும். உங்கள் ஆலோசனையை நண்பர்கள் ஏற்பார்கள்.

தனுசு

மூலம்: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். பூராடம்: பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானம் மகிழ்ச்சி தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும். திருவோணம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை உண்டாகும். அவிட்டம் 1,2: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகளிடம் சுமூகமான நிலை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள். பணிகளில் நிதானம் அவசியம். சதயம்: செயலில் தடுமாற்றம் ஏற்படும். கவனக்குறைவால் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டி வரும். பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சிலர் வீண் பழிக்கு ஆளாவீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உத்திரட்டாதி: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.