நாம் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளும் அவற்றின் விளைவுகளும்
நம் நாட்டு உணவுகளில் சமையல் எண்ணெய் முக்கியமானது. இதனை நாம் உருசிக்கும் ஆரோக்கியத்திற்கும் சமையலில் பயன்படுத்துவோம். குறிப்பாக ஆழமாக வறுப்பது மற்றும் வதக்குவது போன்ற எல்லா வித்திலும் சமையல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலானோர் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன் படுத்துவர். இதனால் ஆரோக்கியக் கேடுகள் உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக எண்ணெய் வகைகளென சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய், நல்லெண்ணெய் என்பன காணப்படுகின்றன.
எண்ணெயை அதன் அதிகபட்ச கொதிநிலைக்கு அதிகமாக சூடாக்கும்போது இரசாயன மூலக்கூறுகளின் கலவை மாறி கொழுப்பு அமிலங்களை கெட்ட கொழுப்புகளாக மாற்றுகிறது.
இவை நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எண்ணெயை அதிகமாக சூடாக்குவது, கலங்களில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என்பது ரத்தக்குழாய் அயன்களை தடுத்து சருமத்தை சேதப்படுத்தும் புற்று நோய்க்கு வழிவகுக்கும்.
காய்ச்சிய எண்ணெயை திரும்ப பயன்படுத்துவதற்கு முன்பு அதன் அதிக பட்ச கொதி நிலையை அறிந்து வைத்திருப்பது நல்லது.
சூரிய காந்தி எண்ணெயை நாம் முறையாக பயன்படுத்தினால் உடம்பில் அது நல்ல கொல்ஸ்ரோலை உண்டு பண்ணி அன்டி ஒக்ஸிடன்களை அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெயை நாம் அதிக கொதிநிலைக்கு விடாது பயன்படுத்தினால் மூளை செயற்பாட்டிற்கு நன்மை தரும்.
நல்லெண்ணெய் சிறந்த எண்ணெயாக பயன்படுத்தும் போது உடல் மனம் வலிமையடையவதுடன் இதயமும் ஆரோக்கியம் பெறுகிறது.