பருவநிலை மசோதாவுக்கான வாக்கெடுப்பை நடத்தவுள்ள சுவிஸ் அரசாங்கம்
தனது நாட்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதன் காரணம் புவி வெப்பமடைவதலின் தாக்கம் என உணர்ந்த சுவிட்சர்லாந்து, தன் நாட்டை கார்பன் நடுநிலைமைக்கு விரைவாக வழிநடத்தும் நோக்கில் பருவநிலை மசோதாவுக்கான வாக்கெடுப்பை வரும் ஞாயிறு அன்று நடத்துகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு, சுவிட்சர்லாந்து நாடு இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், பசுமை சார்ந்த வளர்ச்சி வழிகளை மேம்படுத்தவும், வீட்டிலேயே உண்டாக்கக்கூடிய மாற்று எரிபொருள்களை ஊக்குவிப்பதற்கும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தை சார்ந்து கொண்டு வரப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்தை 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்ரலாக மாற்றும் மசோதா, வலுவான பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், கருத்து கணிப்பு நிறுவனமான ஜிஎஃப்எஸ்.பெர்ன் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், ஆதரவு தற்பொழுது 63% ஆக குறைந்துள்ளதை காட்டுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பெரிய கட்சியும், வலதுசாரி கட்சியுமான சுவிஸ் மக்கள் கட்சி, இந்த மசோதாவை நிராகரிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தது. மேலும், அக்கட்சி இந்த மசோதா பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து வருகிறது.