வழிபாட்டில் மனம் செல்லும் , எதிர்பார்த்த செய்தி வரும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வழிபாட்டில் மனம் செல்லும் , எதிர்பார்த்த செய்தி வரும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

சுவினி: உங்கள் செயல் திறனால் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும். பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பண வரவு உண்டாகும். உற்சாகமான நாள். கார்த்திகை 1: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும். ஆதாயம் கூடும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும். மகிழ்ச்சி கூடும். ரோகிணி: வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த செய்தி வரும். மனதில் குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்படுவதால் செலவுகள் குறையும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னை ஒன்று இன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். நண்பர்கள் உதவுவார்கள். திருவாதிரை: திட்டமிட்ட செயலிலும் செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். சங்கடங்கள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் சங்கடம் தோன்றும். வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பெரியோர் ஆசியினால் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். பூசம்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சி லாபமாகும். ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்

மகம்: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய வாடிக்கையாளர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பூரம்: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1: கடந்த கால அனுபவங்களுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்ப நலனில் கவனம் செலுத்துவீர்கள். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சித்திரை 1,2: பண வரவில் இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தொகை இன்று வந்து சேரும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஓரளவிற்கு நன்மை உண்டாகும். சுவாதி: வெளியூர் பயணங்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள். செயல்களில் குழப்பம் ஏற்படும். விசாகம் 1,2,3: நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம். உங்கள் பணிகளில் விழிப்புணர்வு அவசியம்.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை தீரும். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கேட்டை: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும்.

தனுசு

மூலம்: உடல்நிலை சீராகும். நண்பரின் அவசரமறிந்து உதவி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்கள். எதிரிகள் விலகிச் செல்வர். உத்திராடம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைபட்ட செயல்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் கூடும். திருவோணம்: சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை அடைவீர்கள். அவிட்டம் 1,2: எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பாராத பயணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். சதயம்: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். தடைபட்ட ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: நண்பருடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். வருவாயில் இருந்த நெருக்கடி விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். செலவுகள் கட்டுப்படும். உத்திரட்டாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும்.