இராவணனது பத்து தலைகளும் எதைக் குறித்தன....

#spiritual #Head #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
இராவணனது பத்து தலைகளும் எதைக் குறித்தன....

நம் நாட்டை ஆண்ட ஆரிய அரசர்களுள் இராவணனும் ஒருவன் என்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயமாகும். அதன்படி நம் கடவுள்களுக்கு பல தலைகள் இருந்ததாக சரித்திரம் சான்றாகிறது.

ஆனால் அசுரனான இராவணனுக்கு எதற்காக பத்து தலைகள்? தெய்வ அவதாரமான இராமன் ஒரே அம்பில் இராவணனை வதம் செய்து கொல்லாமல், எதற்காக போரின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தலையாக வெட்டி எடுத்து, இன்று போய் நாளை வா என சொல்லி அனுப்பி வைத்தார்? அப்படி இந்த பத்து தலைகள் எவற்றை குறிக்கின்றன? இராவண வதம் நமக்கு உணர்த்துவது என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 1.காமம் - ராமரின் மனைவியான சீதை மீது ராவணன் கொண்ட காமம் தான் அவனது அழிவிற்கு காரணமாக அமைந்தது.

 2. மதம் - அனைத்து சாஸ்திரங்களையும் கலைகளையும் கற்றறிந்த அறிஞனாக இருந்தாலும், தனது திறமை, அறிவாற்றல் குறித்த ஆணவம் ராவணனிடம் இருந்தது.

 3. அகங்காரம் - ராவணன் கொண்டிருந்த அகங்காரம் தான், பல திறமைகள் இருந்த போதிலும் அவனை தவறான, கொடூரமான ஒருவனாக அனைவரையும் நினைக்க வைத்தது.

 4. மோகம் - தனது ராஜ்ஜியம் உள்ளிட்ட சொத்துக்கள் மீது ராவணன் கொண்டிருந்த அளவில்லாத மோகம் தான் அவற்றை அடைய எந்த எல்லைக்கும் அவனை செல்ல வைத்தது.

 5. லோபம் - ராவணன் கொண்டிருந்த பேராசை தான் அனைத்து நீதி நெறிகளையும் மறந்து, சீதையை கடத்தி செல்ல அவனை தூண்டியது.

 6. குரோதம் - தான் விரும்பியது கிடைக்கவில்லை என ராவணன் கொண்ட கோபம் தான் அவனது அழிவிற்கு மிக முக்கியமான காரணம்.

 7. மாட்சரியம் - மற்றவர்கள் மீது பொறாமை கொண்ட அசுர அரசனாக ராவணன் இருந்தான். அதனால் தான் மற்றவர்களிடம் இருந்தவற்றை அபகரித்து, தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினான்.

 8. ஜடாதா - ராவணன் ஒரு போதும் மற்றவர்களின் உணர்வுகளை பற்றி கவலைப்பட்டதே கிடையாது. தன்னுடைய நலன் ஒன்றிற்கு மட்டுமே அவர் முன்னுரிமை அளித்தார்.

 9. கிரினா - தன்னை எதிர்த்து பேசுபவர்கள், செயல்படுபவர்கள் மீது ராவணன் கொண்ட வெறுப்பு உணர்வே அவனை அழிவின் பாதைக்கு இட்டுச் சென்றது.

 10. பயம் - தான் விரும்பியவற்றை, தனக்கு சொந்தமானவற்றை இழக்க ராவணன் பயந்தான். அதனாலேயே அவற்றை தக்க வைத்துக் கொள்ள பல பாவ செயல்களை ராவணன் செய்தான்.

மேலே குறிக்கப்பட்ட ஒவ்வொன்றும் இராவணனின் ஒவ்வொரு தலைக்கு அர்த்தம் கூறியவை.