தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
#Tamil Nadu
#Temple
#Festival
#spiritual
#Lanka4
#ஆன்மீகம்
Mani
1 year ago

சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் வைக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
முன்னதாக, பக்தர்கள் செவ்வாடை அணிந்து, தீச்சட்டி ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



