சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கும் முக்கிய நடிகை

#Actress #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கும் முக்கிய நடிகை

தன் அழகாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் சமந்தா. இளசுகளின் கனவு கன்னியாய், பட வாய்ப்புக்காக கவர்ச்சி நடிப்பை ஏற்கும் இவரையே ஓவர் டேக் செய்ய நினைக்கும் நடிகையை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

 தற்பொழுது தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வரும் சமந்தா. தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்திற்கு பிறகு தற்பொழுது சென்னை ஸ்டோரி என்னும் படத்தில் கமிட்டாகி உள்ளார். சமீப காலமாக இவர் மேற்கொள்ளும் படங்களில் கவர்ச்சி நடிப்பை வெளிக்காட்டும் இவரைப் போன்றே தற்பொழுது தன் திருமணத்திற்கு பிறகு ரி என்ட்ரி கொடுத்து வருகிறார் ஸ்ரேயா சரண்.

 அவ்வாறு தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஸ்ரேயா தன் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டார். பிறகு மீண்டும் நடிப்பினை தொடங்கிய இவர் கன்னட படமான கப்ஜா படும் தோல்வியை சந்தித்தது. அதன்பின் தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் குத்து பாடலுக்கு மட்டும் ஸ்ரேயா இடம்பெற அவரை அணுகினர்.

 அதற்கு அவர் சம்பளமாக ஒரு கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கலாமா இல்லை வேறு யாரையாவது நியமிக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மாஸ் ஹீரோ படங்களில் குத்து பாடல்கள் இடம்பெறுவது முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும் கவர்ச்சி நடிப்பை மேற்கொள்ளும் நடிகைகளை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் இயக்குனர்கள். 

இதை அறிந்து கொண்டு தன் கவர்ச்சி நடிப்பை வெளிக்காட்ட ஒரு பாடலுக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டு வருகிறார் ஸ்ரேயா. இவர் கேட்கும் இத்தகைய அதிகமான சம்பளம் சினிமா வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் பல பிரபலங்களோடு ஜோடி சேரும் வாய்ப்பை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது வாய்ப்புக்காக கவர்ச்சி நடிப்பை மேற்கொள்வது அல்லாமல் இது போன்ற டிமன்ஸ்களை செய்து வருகிறார். இருப்பினும் இவரின் அடுத்தடுத்த படங்கள் தெலுங்கிலும், தமிழிலும் கமிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!