எதிர்பார்த்த அனுகூலம் ஏற்பட்டு , வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனை நீங்கும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
எதிர்பார்த்த அனுகூலம் ஏற்பட்டு ,  வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனை நீங்கும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சியில் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பரணி: செயலில் வேகம் இருக்கும். வருமானத்திற்கு வழி காண்பீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர்கள். நண்பர்கள் துணையுடன் செயலில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதிநிலை உயரும். ரோகிணி: வர வேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு மிகவும் அவசியம். திருவாதிரை: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் கவனம் அவசியம். புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வரவு செலவில் கவனம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை அவசியம். பூசம்: பணியிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிறு சலசலப்பு தோன்றி மறையும். அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

மகம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். அஸ்தம்: உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: எதிர்பார்த்த செய்தி இன்று வரும். உங்கள் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அதில் ஆதாயம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: செயல்களில் கவனம் தேவை. சனீஸ்வரரை மனதில் எண்ணி செயல்பட முயற்சி பலிதமாகும். அனுஷம்: இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். சில சங்கடங்கள் தோன்றலாம்.

தனுசு

மூலம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பூராடம்: நீண்ட நாள் முயற்சி இன்று பலன் தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். உத்திராடம் 1: எதிர்பார்த்த அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அவிட்டம் 1,2: வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேரும். மகிழ்ச்சி கூடும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உயரும். சதயம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் ஆதரவுடன் ஒரு செயலை செய்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். சகபணியாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். சுறு சுறுப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ரேவதி: தாய்வழி உறவுகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். சொத்து விவகாரம் இழுபறியாகும்.