அசுரன் டயலொக் பேசிய விஜய்: வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்

#TamilCinema #Director
Mani
1 year ago
அசுரன் டயலொக் பேசிய விஜய்: வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12வது பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நடிகர் விஜய் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடந்தது.

இந்த நிகழ்வில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில், சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது என்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசூரன் பட வசனத்தை விஜய் பேசியிருந்தார்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியின் போது இயக்குனர் வெற்றிமாறனிடம் அசுரன் படத்தின் டயலாக் குறித்து விஜய் கூறிய கருத்து குறித்து கேட்கப்பட்டது. ஒரு திரைப்படத்தில் ஒரு வரி சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபரை அடையும் போது அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அவர் விளக்கினார்.

மேலும் அம்பேத்கர், பெரியாரை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, அந்த மேடையில் அவர் சொன்னது, அனைவரும் அவர்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அம்பேத்கர், பெரியார், காமராஜர் மற்றும் அண்ணாவையும் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!