ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி வெண்கலம் வென்றார்
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை சீனாவிலும், அதை தொடர்ந்து இத்தாலியில் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை மற்றொரு போட்டியும் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.
பவானி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் அவர் 15-11 என்ற கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஒசாகி செரியை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, பவானியின் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தார்.