பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் மோடி 4 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா சென்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். புதன்கிழமை, நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். மேலும், தலைமையகத்தில் யோகா கொண்டாட்டத்திற்கும் அவர் தலைமை தாங்குவார்.
மற்றவர்களுடன் சேர்ந்து யோகா செய்கிறார்.22-ந் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், ஜோ பைடனும், ஜில் பைடனும் விருந்து அளிக்கிறார்கள்.ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதே நாளில் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் அவர் பேசுகிறார், மேலும் 23 ஆம் தேதி, வாஷிங்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களிடம் உரையாற்றுகிறார்.