அசாமில் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அசாமில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல், ரெட் அலர்ட் அமலில் உள்ளது, அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அதன்பின் வியாழக்கிழமை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
இதனால் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சிராங், தராங், தெமாஜி, துப்ரி, திப்ருகார், கோக்ராஜ்ஹார், லகிம்புர், சோனிட்புர், உதால்கிரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 30,000 க்கும் மேற்பட்ட நபர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள லகிம்புர் மாவட்டத்தில் மழை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திப்ருகார் மாவட்டத்தில் 3800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் 25 இடங்களில் நிவாரண மையங்களை தொடங்கியுள்ளனர். ஆனால் இன்னும் நிவாரண முகாம் திறக்கப்படவில்லை
கம்பூரில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான கோபிலி அணையின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு, சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.